நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% ஆக இருக்கும்- ஆய்வறிக்கையில் தகவல்

Default Image

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ள நிலையில் இன்று  காலை பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அப்பொழுது அவர் கூறுகையில்,  வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5% ஆக இருக்கும்.2019 – 2020 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக இருக்கும்.நுகர்வோர் பணவீக்கம் 3.7 சதவீதத்தில் இருந்து 4.1% சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது .2025 ஆண்டிற்குள் 4 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும். 2030 ஆம் ஆண்டிற்குள் 8 கோடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்