#BREAKING: ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் -சிபிசிஐடி அறிவிப்பு .!
- குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் தேடிவருகின்றனர்.
- தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்து உள்ளது.
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் போரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 14 -க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் , அரசு ஊழியர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் தேடிவருகின்றனர். இதையெடுத்து தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சிபிசிஐடி போலீசார் அறிவித்து உள்ளது.
மேலும் ஜெயக்குமார் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களும் உஷார் நிலையில் இருப்பதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.தகவல் கொடுக்க நினைப்பவர்கள் 9940269998 ,9443884395 ,9940190030 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,300 -காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்து உள்ளதாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய விசாரணையில் , 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவர சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது.