பரபரப்பு.!அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து திமுகவினர் தர்ணா.!

Default Image
  • பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட 335 பதவிக்கான மறைமுக தேர்தல்  இன்று நடைபெறுகிறது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதன் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

ஆனால் பல்வேறு காரணங்களுக்காக 335 பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு மாநில தேர்தல் ஆணையம் நிறுத்தப்பட்ட மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவித்தது.இதைத்தொடர்ந்து இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் தேர்தலில் மொத்தமாக 19 வாக்குகள் அதில் அதிமுக 10 வாக்குகளும் , திமுக 09 வாக்குகளும் பெற்றதாக கூறி அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுக வெற்றிப் பெற்றதைக் கண்டித்து திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் 8 இடங்களிலும் ,அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடங்களும் பெற்றனர்.அதிமுக சார்பில் 5 இடங்களும் ,கூட்டணி கட்சியான தேமுதிக 1 இடங்களையும் பெற்றனர்.

இவர்கள் இல்லாமல் சுயேட்ச்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்று இருந்தனர்.இந்த சுயேட்ச்சை வேட்பாளர்களின் ஆதரவு அதிமுக, திமுகவிற்கு  சரி சமமான நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ஒரு நபர் திமுக சார்பில் போட்டியிட்டு இருந்தார் அவர் இன்று அதிமுகவிற்கு ஆதரவாக வாக்களித்ததாக  காலை கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து அப்போது வாக்கு எண்ணிக்கை திமுக 10 எனவும் ,அதிமுக 9 எனவும் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் உள்ளே சென்று தேர்தல் நடந்த பிறகு மொத்தம் உள்ள 19 வாக்குகள் அதிமுக 10 வாக்குகளும்  , திமுக 09 வாக்குகளும் பெற்றதாக கூறி அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி எம்.பி கனிமொழி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்னர் திமுக கட்சியினருடம் சாலையில் எம்.பி கனிமொழி  தர்ணாவில் ஈடுபட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்