நிறுத்திவைக்கப்பட்ட இடங்களில் தொடங்கிய தேர்தல் ! ஒரு சில இடங்களில் மீண்டும் நடைபெறவில்லை

Default Image
பல்வேறு காரணங்களுக்காக 35 பதவிடங்களுக்கான  மறைமுகத்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் மீண்டும் தொடங்கியது.ஆனாலும் தண்டாரப்பட்டு திருப்புவனம் ,கடலூர் மங்களூர் ஒன்றியத் தலைவர் ஒன்றியத் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு  டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி  மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட  ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.பின்பு நிறுத்தப்பட்ட 335 பதவிடங்களுக்கு மறைமுக தேர்தல் இன்று  (ஜனவரி 30-ஆம் தேதி )நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி இன்று ( ஜனவரி 30-ஆம் தேதி )காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் தொடங்கியுள்ளது.ஆனால் தண்டாரப்பட்டு திருப்புவனம் ,கடலூர் மங்களூர் ஒன்றியத் தலைவர் ஒன்றியத் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்