நடிகர் சாய் தீனாவுக்கு சர்வதேச பல்கலைக்கழகம் வழங்கிய உயரிய விருது!
- நடிகர் சாய் தீனா தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர்.
- நடிகர் சாய் தீனாவுக்கு சேவா ரத்னா விருது.
நடிகர் சாய் தீனா தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பல படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் படங்களில் மட்டும் தான் எதிர்மறையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் நல்ல மனிதர் என பலராலும் போற்றப்படக் கூடிய ஒரு நடிகர்.
இந்நிலையில், மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து மக்கள் சேவையாற்றி வருபவர். தற்போது இவரின் சமுக சிந்தனையையும் சேவையையும் பாராட்டி சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சேவா ரத்னா என்ற விருதளித்து அவரை பெருமைப்படுத்தியுள்ளது.