அரைசதம் அடித்த ரோகித் ! நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 179 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது டி -20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் ( Seddon Park) மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி ஓரளவு தாக்கு பிடித்து இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.இந்த சமயத்தில் ராகுல் 27 ரன்களில் வெளியேறினார்.இவருக்கு அடுத்தபடியாக சிவம் துபே களமிறக்கப்பட்டார்.ஆனால் இவர் 3 ரன்களில் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.மறுமுனையில் ரோகித் தனது 20-வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
பின்பு ரோகித் அரை சதத்திற்கு பிறகு 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.கோலி தனது பங்கிற்கு 38 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ஜடேஜா 10*,பாண்டே 14* ரன்களுடனும் இருந்தனர். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் பெனட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025