பாஜகவினர் பிரச்சார கூட்டத்தில் உருட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய விசிகவினர்.!
- மதுரை மாவட்டம் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சார்பில் பிரச்சாரம் நடந்தது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து பாஜகவினர் விமர்சனம் செய்தனர்.
- அப்போது திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் உருட்டு கட்டையால் பாஜகவினரை தாக்கியுள்ளார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் பாஜகவினர் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை சந்திப்பில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் தலைமையில் பிரச்சாரம் நடந்தது. இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், வைகோ உள்ளிட்ட தலைவர்களை கண்டித்து பாஜகவினர் பிரச்சாரத்தில் அவர்கள் மீது விமர்சனம் செய்தனர். அப்போது திடீரென அந்த கூட்டத்திற்குள் புகுந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் உருட்டு கட்டையால் பாஜகவினரை தாக்கியுள்ளார். பின்னர் இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில், தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை இருதரப்பினருக்கும் மோதலை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பாஜகவினர் அலங்காநல்லூர் – மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்ற பாஜகவினர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்ட விசிகவினரை உடனே கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்த பின் பாஜகவினர் புகார் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.