படப்பிடிப்பிற்கு திரும்பிய STR! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Default Image
  • நடிகர் சிம்பு மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
  • சிம்பு நடிக்கும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக உருவாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான செக்கசிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில், நடிகர் சிம்பு மஹா படத்திற்காக ஹன்சிகாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, படப்பிடிப்பில் சிம்பு ஹன்சிகாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பிற்கு திரும்பியுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிம்பு நடிக்கும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக உருவாகி உள்ளது. இந்த படம் தன்ஷிகாவின் 50-வது படமாகும். இந்த படத்தையடுத்து, சிம்பு மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்