அஜித்தின் வலிமை படத்தில் பைக் ரேஸிங் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதா?
- அஜித்தின் வலிமை படத்தில் பைக் ரேஸிங் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதா?
- அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, நடிகர் அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தை தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், மேலும் இப்படத்தில், பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இடம் பெறவுள்ளதாம்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு அஜித் நடிக்கும் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.