BREAKING: குரூப் 4 முறைகேடு சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வராது.! சிபிஐக்கு விசாரணையை மாற்ற முறையீடு .!
- குரூப் 4 முறைகேடு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகமது ரஸ்வி என்பவர் முறையீடு செய்து உள்ளார்.
- குரூப் 4 முறைகேடு மட்டுமின்றி சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என முகமது ரஸ்வி கூறியுள்ளார்.
குரூப் 4 முறைகேடு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முகமது ரஸ்வி என்பவர் முறையீடு செய்து உள்ளார். அதில் ,குரூப் 4 முறைகேடு மட்டுமின்றி சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிபிசிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என முகமது ரஸ்வி என்பவர் முறையீடு செய்து உள்ளார்.
மேலும் குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி நடத்திய விசாரணையில் 99 தேர்வர்கள் முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத தடை விதித்தது.பின்னர் சிபிசிஐடி போலீசார் மூன்று தனிப்படை அமைத்து குரூப் 4 முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் நேற்று வரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.