ஒதுங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த இளம்பெண்!2 நாட்கள் உணவு வழங்காமல் உல்லாசத்தில் ஈடுபட்ட கொடூரம்!
- ஒதுங்குவதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்த இளம்பெண்.பின்னர் நடந்த விபரீதம்.2 நாட்கள் உணவு வழங்காமல் உல்லாசத்தில் ஈடுபட்ட நபர்.
- களத்தில் இறங்கிய காவல்துறையினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் ஆவார்.இவரது மனைவி செல்லாயி.இந்த தம்பதியினருக்கு 20 வயதான தனலட்சுமி என்ற இளம் பெண் உள்ளார்.இவர்களது வீட்டில் கழிவறை இல்லை.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக ஒதுங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் தனலட்சுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் எங்கு தேடியும் தனலட்சுமி கிடைக்காத காரணத்தால் செய்வதறியாது திகைத்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பல இடங்களில் தனலட்சுமியை தேடிவந்துள்ளனர்.
ஆனால் அவர்களாலும் தனலட்சுமியை கண்டுபிடிக்க இயலவில்லை.இந்நிலையில் தனலட்சுமியின் சகோதரரிடம் அவரது உறவினர் சுரேஷ் என்பவர் தன்னுடைய வீட்டில் தனலட்சுமி இருப்பதாக கூறியுள்ளார்.
இதன் காரணமாக காவல்துறையினருடன் சுரேஷின் வீட்டிற்கு தனலட்சுமியின் பெற்றோர் விரைந்துள்ளனர்.அங்கு மயங்கி கிடந்த தனலட்சுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தனலட்சுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.பின்னர் வழக்கு பதிவ செய்த காவல்துறையினர் சுரேசை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சுரேஷ் ஏற்கனவே திருமணம் செய்தவர் எனவும் தற்போது அவர்களை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் தனலட்சுமியின் மீது சுரேசுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீட்டை விட்டு தனியே வெளிய வந்த தனலட்சுமியை பார்த்த சுரேஷ் அவரை கடத்தி சென்று வீட்டில் அடைத்துள்ளார்.பின்னர் உணவு வழங்காமல் அவரை கொடுமை படுத்தி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார் என காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் தலைமறைவாகிய சுரேசை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.