பயணியின் தங்க தாலிக்கொடியை ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்.!குவிக்கும் பாராட்டுக்கள் .!
- ஈரோடு மாவட்டத்தில் உள்ள கெட்டவாடி என்ற கிராமத்திற்கு அரசு பேருந்தில் பயணம் செய்த துண்டம்மா என்ற பெண் தனது தங்கச்சங்கிலியை தவறவிட்டார்.
- பின்னர் துண்டம்மா தவறவிட்ட தங்கச்சங்கிலியை அவரிடமே ஒப்படைத்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையத்தில் இருந்து கெட்டவாடி என்ற கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றது. கெட்டவாடியில் இருந்து பேருந்து திரும்பிக்கொண்டிருந்த போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே பயணம்செய்தனர்.
அப்போது பயணிகள் இருக்கையின் கீழ் தங்கச்சங்கிலி கிடைப்பதை நடத்துனர் மகேஷ் பார்த்துள்ளார். இதுபற்றி நடத்துனர் மகேஷும் , ஓட்டுநர் ரமேஷும் பயணிகளிடம் கூறியுள்ளார். தாலிக்கொடி தவறவிட்ட பயணி யார்..? என விசாரித்து தங்களை தொடர்பு கொள்ளும்படி இருவரும் கூறியுள்ளனர்.
அவர்கள் விசாரித்ததில் பேருந்து கெட்டவாடி சென்றபோது அதில் பயணம் செய்த துண்டம்மா என்ற பெண் தனது தங்கச்சங்கிலியை தவறவிட்டது தெரியவந்தது இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் தங்கச்சங்கிலியை நடத்துனரும் , ஓட்டுனரும் ஒப்படைத்தனர்.நேர்மையுடன் செயல்பட்ட நடத்துனர் ,ஓட்டுநர் இருவரையும் பொதுமக்கள் பாராட்டினார்.