தென்னிந்திய நிறுவனத்தின் தலைவர் நம்பிக்கை!ஏர்செல் நெட்வொர்க் பிரச்சனை விரைவில் சரியாகும்…..
ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன், ஏர்செல் சேவையில் உள்ள பிரச்சனைகள் இரண்டு நாளில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஏர்செல் நெட்வொர்க் சேவை முற்றிலும் முடங்கியதால், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அந்நிறுவனத்தின் சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏர்செல்லின் டவர்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளதால் சிக்னல் தடைபட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் சங்கரநாராயணன் நேற்று விளக்கம் அளித்திருந்தார். ஏர்செல் டவர் வைத்திருக்கும் தனியார் ஏஜென்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், சிக்னல் பிரச்சினையை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏர்செல் சேவையில் உள்ள பிரச்சனைகள் இரண்டு நாளில் சரிசெய்யப்படும் என சங்கரநாராயணன் இன்று தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்ட ஏர்செல் சேவைகள் தற்போது வரை 60 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது என்றும், இன்று இரவுக்குள் 75 சதவீதம் அளவுக்கு சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை, திருச்சி, கோவை, மதுரை என பெரிய நகரங்களில் ஏர்செல் இணைப்பு முழுமையாக மீண்டுள்ளது என்றும், தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவையை மீண்டும் சீர்செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.