நீட் தேர்வு கட்டாயம் -உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

- நீட் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கில் நீட் தேர்வு கட்டாயம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நாடு முழுவதும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இதற்கு இடையில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்.எனவே மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் நீட் தேர்வை கட்டாயமாக்கியதை எதிர்த்து வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு ,உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள்,நீட் தேர்வு கட்டாயம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்று. அதை மாற்ற முடியாது என்று தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025