ஏர் இந்தியாவை விற்க முடிவு ..! வாங்கப்போவது யார் ?
- நீண்டகாலமாக ஏர் இந்தியா நிறுவனம் கடன் சுமையில் தத்தளித்து வருகிறது.
- ஏர் இந்தியாவின் 100 சதவிகித விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.ஏர் இந்தியா நிறுவனம் அண்மைக்காலமாகவே கடன் சுமையில் தத்தளித்து வருகிறது .சுமார் ரூ.60,000 கோடி கடன் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உள்ளதாக கூறப்படுகிறது.ஆகவே இதன் பங்குகளை நீண்ட நாட்களாகவே விற்க மத்திய அரசு முடிவு செய்து வந்தது.ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்து வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.அதாவது ஏர் இந்தியாவின் 100 சதவிகித விற்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.எனவே ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் மார்ச் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் பங்குகளை இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.