தொழில் முனைய உதவிக்கு என்னை அணுகலாம்-ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தொழில் முனைவோருக்காக ஆளுநர் மாளிகையின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் தொழில் தொடங்க எத்தைகைய உதவி தேவைப்பட்டாலும் தம்மை அணுகுமாரும் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் நடைபெற்ற ஜெயின் சமையத்தை பின்பற்றுவோர்கள் வைத்துள்ள ஜெயின் சர்வதேச வர்த்தக என்கிற அமைப்பின் தொழில் முனைவோருக்கான வர்த்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். அப்போது ஆளுநர் பேசுகையில், “ஜெயின் சமூகத்தினர் தமிழகத்தில் பெரும்பாலான எண்ணிக்கையில் இருப்பதால் தமிழ்பேச கற்றுக்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலை உள்ளது. மேலும் அவர் தொழில் முனைவோருக்காக ஆளுநரின் ராஜபவன் மாளிகையின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். தொழில் தொடங்க உதவி தேவைப்பட்டால் என்னை அணுகலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்