மீண்டும் அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.! போர் பதற்றத்தில் பொதுமக்கள்.!

Default Image
  • இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அடுத்தடுத்து 5 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
  • இதை ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரானின் முக்கிய நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதே நேரத்தில் இராக்குக்கு சொந்தமான போயிங் ரக விமானம் எறிந்த நிலையில் கீழே விழுந்து நொறுக்கியது. இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டாலும், பல அண்டை நாடுகள் ஈரான் மீது குற்றம்சாட்டினர், ஆனால் ஈரான் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் ஈரான் அரசு இறுதியாக அந்த விமான தாக்குதல் மனித தவறுகளின் காரணமாக வீழ்த்தப்பட்டது என உண்மையை ஏற்றுக்கொண்டது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவியது. பின்னர் எந்த நேரத்திலும் மோதல் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்தவொரு போரும் ஏற்படவில்லை. இரு தரப்பிலும் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், இரு நாடுகளின் தலைவர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறியும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் அடுத்தடுத்து 5 ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் காயமடைந்தார். இது ஈரான் இஸ்லாமிய புரட்சி ராணுவத்தினர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு இராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இருநாடுகளின் தூதரக உறவைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இராக்கிடம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்