ஒடும் காரில் துடிதுடிக்க பள்ளி மாணவி..வாயில் மதுவை ஊற்றி சக மாணவர்கள் வெறிச்செயல்.! அதிர்ச்சி சம்பவம்

Default Image
  • ஹரியானாவில் பள்ளி மாணவிக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை 
  • சக மாணவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தேசிய பெண் குழந்தைகள் தினம் அன்றே ஹரியானா மாநிலத்தில் ஓடும் காரில் பள்ளி மாணவியை ஒருவரை கடத்தி  பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் ஆனது ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள மாதிரி நகரத்தில் உள்ள பிரதான பூங்கா பகுதியிலேயே கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு தன் டியூஷன் வகுப்புக்கு செல்வதாகக் கூறி விட்டு தன் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்.அதன் பின் வீடு திரும்பவில்லை மேலும் நள்ளிரவு ஆகியும் மாணவி வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர்  மாணவியை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கே  தேடியும் மாணவி கிடைக்க வில்லை இவ்வாறு தேடி கொண்டிருக்கும் பொழுது டி.ஏ.வி. பூங்காவின் அருகே மாணவி மயக்க நிலையில் கிடந்துள்ளார் அடையாளம் காணப்பட்ட அவரை பெற்றோர்  தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி அனுமதித்தனர்.

Related image

தன்னிலை அறியாமல் மயக்கத்தில் இருந்த அவர் மயக்கம் தெளிந்தவுடன் மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதற்கு பதிலளித்த மாணவி கூறிய பதில்கள் அதிர்ச்சி அடைய வைத்தது.

Related image

பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக கூறி என்னுடைய நண்பர்கள் அருகே உள்ள பூங்கா பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்.தான் முதலில் வரமாட்டேன் என்று சொன்னேன் என்னை கட்டாயப்படுத்தி பூங்காவுக்கு அழைத்துச் சென்றவர்கள், அவர்கள் வைத்திருந்த மதுவை கட்டாயப்படுத்தி என்னை அருந்த செய்தனர். நான் மயகமடைந்து விட்டேன் என்று கூறினார்.

 

மேலும் இது கூறித்து போலீசார் கூறுகையில் இரவு நேரம் என்பதால்  மயக்கமடைந்த மாணவியை அந்த நபர்கள் தங்களது காரில் ஏற்றி ஓடுகின்ற காரில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இதனையடுத்து மயக்கமடைந்த நிலையில் ரத்த காயங்களுடன் மாணவியை அந்த கும்பல் பூங்கா அருகே போட்டுவிட்டு சென்று உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Image result for DRINK STUDENTS

இந்த கொடூர செயல் தொடர்பாக  ஆஷிஷ் மற்றும் விஷ்ணு ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். 4 பேர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட  நிலையில் அவர்கள் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாகி உள்ள மேலும் இருவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

ஹரியானாவில் மட்டும்  இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த 7 மாதத்தில் மட்டும் 99 புகார்கள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips
KKR VS LSG IPL 2025