நான் திருமணம் ஆன பின்னும் நடிக்கிறேன்… சினிமா உலகில் நீடித்து நிலைக்க முன்னணி நடிகை யோசனை…
- நீடித்து நிலைக்க முன்னணி நடிகை அட்வைஸ்.
- தமிழில் நல்ல பட வாய்ப்புகள் அமைந்துள்ளன எனவும் கருத்து.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தெலுங்கு, இந்தி முதலிய மொழிகளில் படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு கடந்த 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நான் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் கூடிய விரைவில் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தமிழ் படமொன்றிலும் நடிக்க தற்போடு பேச்சுவார்த்தை நடக்கிறது.
கஷ்டப்பட்டு வேலை செய்வதுதான் முக்கியம். கடின உழைப்பாளிகளால் சினிமாவில் நீடிக்க முடியும். நான் கஷ்டப்பட்டு உழைத்ததால்தான் நிலைத்து இருக்க முடிந்தது
தெலுங்கு, இந்தி முதலிய படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தற்போது வருகின்றன. நல்ல கதை அமைந்தால் வெப் தொடர்களில் நடிப்பேன்.” இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.