விவசாயி வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றுகிறார் பழனிசாமி – மு.க.ஸ்டாலின்
- ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் என ஊடகச் செய்திக்காக ஒரு நாடகமாடுகிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- மேலும் விவசாயி வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும் கூறியுள்ளார்.
ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறு அமைப்பதற்க்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனம் பெற வேண்டியது கட்டாயம் இல்லை எனவும் , மேலும் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த தேவையில்லை எனவும் மத்திய அரசு கூறியது.இந்த உத்தரவிற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாக்க, உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாண, தமிழக உரிமை காக்க ஜன 28 ஒன்று திரண்டு உரிமைக்குரல் எழுப்புவீர்.
கோட்டையில் கொலு பொம்மைகளாக வீற்றிருப்போர் செவிகள் அதிரட்டும்! டெல்லிவரை எதிரொலிக்கட்டும்!
#LetterToBrethren pic.twitter.com/DAqy2t7V2W— M.K.Stalin (@mkstalin) January 26, 2020
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் என ஊடகச் செய்திக்காக ஒரு நாடகமாடுகிறார் .விவசாயி வேடம் போட்டு தமிழக மக்களை ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி. மத்திய ஆட்சி மொழியாகவும், நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாகவும் தமிழ் அரியணை ஏறவேண்டும்.கோவில்களின் கருவறை முதல் கோபுரம் வரை தமிழ் மந்திரங்கள் ஒலி. காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாக்க, உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாண, தமிழக உரிமை காக்க ஜன 28 ஒன்று திரண்டு உரிமைக்குரல் எழுப்புவீர். கோட்டையில் கொலு பொம்மைகளாக வீற்றிருப்போர் செவிகள் அதிரட்டும், டெல்லிவரை எதிரொலிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.