‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒப்பந்தம்

Default Image

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் 500 பேருக்கு சிறப்பு பயிற்சியை அளிப்பதோடு, 7 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் அனுமதியையும் பெற்று ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் தமிழக கல்வித்துறையோடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மைக்ரோசாஃப்ட் அதிகாரி மணீஷ் பிரகாஷ், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்தார். சிறப்புப் பயிற்சிக்கான ஒப்பந்தம் இரு தரப்பிலும் கையெழுத்தானது. மேலும், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர், ஓசூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் 7 பள்ளிகளைத் தத்தெடுப்பதற்கான அனுமதியையும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவன அதிகாரி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து பெற்று கொண்டார். இது குறித்து செங்கோட்டையன் கூறுகையில், “தமிழகஅரசு பல்வேறு மாற்றங்களை பள்ளி கல்வித்துறை சார்பில் செய்து வருவதாகவும்,500 அரசு ஆசிரியர்களுக்கு மைக்ரோசாப்ட் ஈ புக் மூலம் பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்