குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.!

  • தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். பின்னர் குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
  • வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவிற்கு வழங்கப்பட்டது.

இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . பின்னர்  முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.அதில் சிறந்த காவல் நிலையத்திற்கான பிரிவில் கோவை நகரம் முதல் பரிசையும் , திண்டுக்கல் இரண்டாம் பரிசையும், தருமபுரி மூன்றாம் பரிசையும் பெற்றது.

வேளாண்மைத் துறைக்கான சிறப்பு விருது ஈரோடு மாவட்டம் சென்னி மலையைச் சேர்ந்த யுவகுமாருக்கு வழங்கப்பட்டது.

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் திருச்சியைச் சேர்ந்த ஷாஜ் முகமதுவிற்கு வழங்கப்பட்டது.

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவிற்கு வழங்கப்பட்டது.

author avatar
murugan