பள்ளிகள் மேல் எரிச்சலில் பள்ளிக்கல்வித்துறை..!நடவடிக்கை எடுக்க தயங்காது என்று எச்சரிக்கை

Default Image

பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்யாத பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை 

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் வருகைப்பதிவு செய்ய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Image result for பயோமெட்ரிக் அரசு ஆசிரியர்கள்

இந்த பயோமெட்ரிக் கருவிகள் ஆனது கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்துடன் இணைக்கப்பட்டு இருப்பதால் வருகைப் பதிவு நேரம் ஆகியவை கல்வி அதிகாரிகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related image

இந்நிலையில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் பயோமெட்ரிக் கருவியில் வருகையை பதிவு செய்வது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு அதற்கான  நடவடிக்கைகளை முடிக்கிவிட்டிருந்த நிலையில்

Related image

பல  பள்ளிகள் பயோமெட்ரிக் கருவிக்கு மாறிவிட்ட நிலையில் இயக்குநரின் உத்தவரை செவிக்கொடுக்காமல் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவியில் வருகையைப் பதிவு செய்யாத பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களுக்கு விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Image result for பயோமெட்ரிக் அரசு ஆசிரியர்கள்

இதன் பின்பும் பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்தாத பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்