150 கிடாய் வெட்டி, 300 கோழி அறுத்து கோலாகலமாக நடைபெற்ற பிரியாணி திருவிழா.! கூட்டம் கூட்டமாக கலந்துகொண்ட பக்தர்கள்.!

Default Image
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது.
  • நிர்வாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிட்டு, கோவில் வளாகத்திலியே அசைவ பிரியாணி சமைக்கப்பட்டு, கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடுகம்பட்டி முனியாண்டி சுவாமி கோவில் 85-ம் ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இதனையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள், தேங்காய் மற்றும் பூத்தட்டு தலையில் சுமந்தபடி கோவிலுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து வந்தனர்.

இவ்விழாவின் நிர்வாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு, பின்னர் கோவில் வளாகத்திலியே அசைவ பிரியாணி சமைக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

இதனை பெற்றிட மக்கள் போட்டிபோட்டு பிரியாணியை பெற முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த போலீசார் கூட்டத்தை சரிப்படுத்தி  பிரியாணியை விநியோகம் செய்ய உதவினர். பிரியாணி அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரியாணி பிரசாதத்தை பெற்று சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்