உலகநாயகன் கமலுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Default Image
  • உலகநாயகன் கமலுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
  • ரஜினி படத்தை தயாரிக்க உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ். 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தற்போது இவர், சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர், அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை கமலின், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும், ரஜினி தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதால்,  இது அவரது இறுதி படமாக கூட இருக்கலாம் என கூறுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்