திராவிட கட்சிகள் என்றால் இரண்டு தான்,மற்ற கட்சிகள் சில்லறைகள் – அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு
- தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் என்றால் இரண்டு தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
- மற்ற கட்சிகள் சில்லறைகள் என்று கூறியுள்ளார்.
ஜனவரி 17 ஆம் தேதி எம்ஜிஆரின் 103 -வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுக சார்பாக எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் பல இடங்களில் கொண்டாப்பட்டு வருகிறது.அந்த வகையில் இதன் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில் தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் என்றால் இரண்டு தான் .இரண்டு திராவிட கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் சில்லறைகள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக,பாஜக,தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டணி வைத்தது.தற்போதும் அந்த கூட்டணி தொடர்ந்து உள்ள நிலையில் அதிமுங்க அமைச்சர் செல்லூர் ராஜு பேசிய கருத்து கூட்டணிக்குள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.