கூகுளுடன் இணையும் முண்ணனி நிறுவனம்!
கூகுள் அசிஸடன்ட் (Google Assistant) இணைப்பு நெஸ்ட் கம் ஐகியூ (Nest Cam IQ) கண்காணிப்பு கேமராவுக்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
நெஸ்ட் கம் ஐகியூ(Nest Cam IQ) கேமராக்கள் உள்ளரங்க கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பயனாளர்கள் குரல் மூலம் கேமராக்கள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் வசதியை கூகுள் அசிஸடன்ட்(Google Assistant) வழங்குகிறது.
பயனாளர்களின் முகத்தையும் கேமரா மூலமாக அடையாளம் காணும் விதத்தில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள்(Google) தெரிவித்துள்ளது. அமேசான், ஆப்பிள் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் விதமாக மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட் (Nest) – ஐ கூகுள்(Google) வாங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.