குடற்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் இதெல்லாம் செய்யாதீங்க!
- குடல் புண் எவ்வாறு வருகிறது.
- குடல் புண் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.
குடல் புண் என்பது, நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது. இதை தான் குடல் புண் என்று சொல்லுகிறோம்.
பொதுவாக நமக்கு பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் ஏற்படுகிறது. குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும் ,நேரம் தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.
சாப்பிட கூடாதவை
புகைபிடித்தல்
குடற்புண் உள்ளவர்கள், மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் இருக்க கூடாது. இந்த பழக்கம் நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.
அதிக உணவு
குடற்புண் பிரச்சனை உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து, அளவோடு சாப்பிட வேண்டும்.
எண்ணெய் உணவுகள்
குடற்புண் பிரச்னை உள்ளவர்கள், காரமான மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை .தவிர்க்க வேண்டும். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடுவது குடற்புண்ணின் தீவிரத்தை அதிகரிக்க செய்கிறது.
பட்டினி
குடற்புண் பிரச்னை உள்ளவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். எவ்வளவு முக்கியமான வேலிகள் இருந்தாலும், பட்டினி கிடைக்காமல், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.