4 நாட்களாக தொடர் சோதனை ..! வேலம்மாள் குழுமம் ரூ.532 கோடி வரி ஏய்ப்பு
- வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
- இந்த சோதனையில் 532 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேலம்மாள் குழுமம் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.இந்த குழுமத்திற்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பள்ளிகள் ,கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இதற்கு இடையில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வேலம்மாள் குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில், 2 கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் கைப்பற்றப்பட்டதுடன், வேலம்மாள் கல்விக் குழுமம் 532 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சம்பந்தப்பட்ட குழும நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.