இரண்டு பேரை கொன்ற யானை.! 600 பள்ளிகளுக்கு விடுமுறை .!

- ஒடிஷா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள கொரி ,தானாகாதி ,சுகிந்தா போன்ற பகுதிகளில் 10 வயது மதிப்புத்தக்க யானை ஓன்று சுற்றி வருகிறது.
- பள்ளி இருக்கும் இடங்களில் அருகில் தான் யானை பதுங்கி உள்ளதால் 600 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள கொரி ,தானாகாதி ,சுகிந்தா போன்ற பகுதிகளில் 10 வயது மதிப்புத்தக்க யானை ஓன்று சுற்றி வருகிறது.இந்த யானை அருகில் உள்ள ஒரு காட்டு பகுதியில் இருந்து நகருக்கு வந்து உள்ளது.இந்த யானை சமீபத்தில் கொரி பகுதிக்கு சென்று போது அங்கு உள்ள மக்கள் விரட்டி அடித்தனர்.
அப்போது இந்த யானை இரண்டு முதியவர்களை மிதித்து கொன்றது. தற்போது இந்த யானை மீண்டும் அதே பகுதிக்கு வந்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து உள்ளனர்.
அந்த யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் அந்த யானை அதே பகுதியில் சுற்றி வருகிறது.இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஒரு கூறுகையில் , பள்ளி இருக்கும் இடங்களில் அருகில் தான் யானை பதுங்கி உள்ளது.எனவே எங்களுக்கு குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம் அதனால் தான் இன்று ஒருநாள் மட்டும் 600 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஒடிசா வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் எவ்வளவு பள்ளிகளுக்கு விடுவது இதுவே முதல்முறை என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025