உங்கள் கணினியிலுள்ள டூப்ளிகேட் ஃபைல்களை நீக்குவது எப்படி?
Duplicate cleaner ஆப்பினை நமது செயலியில் இன்ஸ்டால் செய்துகொண்டு அதன் வழியாக நாம் நமக்கு தேவையற்ற மற்றும் கணினியின் துரித செயல்பாட்டினைத் தடுக்கிற ஃபைல்கள் மற்றும் போல்டர்கள் ஆகியவற்றினை நீக்கலாம்.
மேலும் இந்த ஆப் ஆங்கிலம்,பிரெஞ்சு,ஜெர்மன் மற்றும் சீன மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவதற்கும் எளிதாகவும் இருக்கும்.நீங்கள் போல்டரினைத் தேர்ந்தெடுத்தால் போதும் அதிலுள்ள தேவையற்ற ஃபைல்களை நமக்கு இந்த ஆப் காட்டும்.அவற்றை நாம் டெலீட் செய்து கொள்ளலாம்.
இந்த ஆப்பானது அதிகப்படியான அளவுள்ள பைல்களை ஆய்வு செய்து அதிலுள்ள தேவையற்ற பைல்களைக் கண்டறிய உதவும்.
இந்த ஆப் பெரும்பாலான வடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகின்ற ஒன்று. சி டிரைவ்விலுள்ள ஜங்க் பைல்ஸ் உள்ளிட்டவற்றை நீக்கவும் செய்யலாம்.மேலும் இந்த செயலியில் தேவையற்ற பைல்களை நீக்க டூல்ஸ் பகுதிக்கு சென்று பைன்ட் அன்வாண்டேட் பைல்ஸ் என்கிற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து நாம் விரும்பத்ததாகவற்றை எளிதா நீக்கிக்கொள்ளலாம்.மேலும் இது கணினியில் பயன்படுத்துவதற்கு ஏற்றது.