அமைச்சராகாவிட்டால் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நானே ஏலத்தில் எடுத்திருப்பேன்..மத்திய அமைச்சர் அதிரடி கருத்து..

Default Image
  • ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடன்  விவகாரம் குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி.
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அதிரடி  கருத்து.

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட  மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களிடம், மாநாட்டின் இடையே,  அவரிடம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடனில் சிக்கி  தவிப்பதால் அதன் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது குறித்து  நிருபர்கள் கேள்விகள் எழுப்பினர். அதற்கு பியூஸ் கோயல்  கூறியதாவது,

Image result for air india
ஏர் இந்தியா, பிபிசிஎல் போன்ற நிறுவனங்கள் கடனில் சிக்கி தவிப்பதால் அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நான் தற்போது அமைச்சராக இல்லாமல் இருந்தால், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை நானே ஏலத்தில் எடுத்திருப்பேன். பிறநாட்டு விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏர் இந்தியா நிர்வாகத்தை சிறப்பாக செயல்பட வைத்திருப்பேன் என்றார். மேலும் அவர், இன்று, இந்தியா முதலீட்டுக்கு ஏற்ற நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. முதலீட்டாளர்கள் மிகுந்த கவுரவத்துடன், நம்பிக்கையுடன் இந்தியாவில் தொழில் செய்யலாம்.

Image result for piyush goyal

பொதுத்துறை வங்கிகளின் பல்வேறு  பிரச்னைகளை தீர்க்க ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும்,  பொதுத்துறை வங்கிகள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லை என்று நாங்கள் நினைக்கவில்லை. இந்தியாவில் உள்ள பல்வேறு தனியார் வங்கிகளும் எங்களுக்கு புகழ் சேர்க்கவில்லை. ஆனால் இந்திய அரசால் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்படும் இந்திய  வங்கிகள் நாட்டுக்கு சிறந்த சேவையாற்றி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். இவரி கூறிய கருத்து தற்போது இந்திய அரசியலில் பேசுபொருளாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்