கோவில்பட்டியில் கொசு பிடிக்கும் போராட்டம் !வாலிபர் சங்கத்தை சார்ந்தவர்கள் நூதனமாக போராட்டம் ..
கொசு பிடிக்கும் போராட்டம் Dyfi கோவில்பட்டி நகர குழு
மழை காரணமாக தமிழகம் முழுவதும் கொசு தொலை அதிகமாக உள்ளது இந்நிலையில் இந்த கொசுவினால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு விதமான வியாதிகளும் வருகின்றது.இந்நிலையில் அரசு என்னதான் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொசு ஒழிந்தபாடு இல்லை. கோவில்பட்டி நகராட்சி 18 வது வார்டு முத்து மாரியம்மன் கோவில் முன்பு மழை நீர் தேங்கி, சாலை குண்டு குழிகள் இருக்கிறது அப்பகுதி மக்களுக்கு டெங்கு போன்ற நோய்கள் பரவியுள்ளது இதனை கண்டு கொள்ளதா நகராட்சி மாற்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கொசு பிடிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது கலந்து கொண்டவர்கள் :மாரிகுட்டி,உமாசங்கர், ராமேஸ்,ராமமூர்த்தி, இராமர், ராமசுப்பு, அந்தோணி செல்வம்,ஆனாந்,பாலு,முத்துலெட்சுமி போன்ற பலர் கலந்துகொண்டனர் DYFI கோவில்பட்டி நகர குழு சார்ந்தவர்கள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர்.