சூர்யாவின் மாறா தீம் எப்போது வெளியாகிறது தெரியுமா?

- இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம்.
- சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் நாளை மாலை 4 மணியளவில் வெளியாகும்.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம். இந்த திரைப்படம், இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில், அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் நாளை மாலை 4 மணியளவில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.