பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க ரெடியா ? முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி

- அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்திற்கு விட்டு தர தயாரா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுகவில் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தக்காலத்தில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.ஆனால் அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், திமுகவில் அது போல் நடக்காது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,3 முறை முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வத்துக்கு, தனது பதவியை விட்டுத்தர தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.கருணாநிதி வீட்டில் இருந்து வந்தால் மட்டும் தான் வாரிசு அரசியலா ,தேசிய தலைவர்களான நேரு, தேவகவுடா, முலாயம் சிங் உள்ளிட்ட பலரது வீட்டிலிருந்தும் வந்தால் அது வாரிசு அரசியல் ஆகாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025