தன்னை பார்ப்பதற்காக சாலையில் தங்கியிருந்த ரசிகரை சந்தித்த பூஜா! அவருக்கு என்ன அறிவுரை கூறியுள்ளார் தெரியுமா?
- தன்னை சந்திப்பதற்காக சாலையில் தங்கியிருந்தவரை சந்தித்த பூஜா.
- ரசிகர்கள் இவ்வாறு செய்வது தனக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
இன்று திரையுலக பிரபலங்களை பொறுத்தவரையில், அனைவருக்குமே ரசிகர்கள் உள்ளர்னர். அந்த வகையில் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முக முடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரை சந்திப்பதற்காக பாஸ்கர் ராவ் என்ற ரசிகர் ஒருவர் பூஜா ஹெக்டேவை சந்திப்பதற்காக மும்பை சென்ற அவர், தங்குவதற்கு இடம் இல்லாமல் சாலையிலேயே தங்கியுள்ளார். 5 நாட்கள் சாலையில் தங்கியிருந்த இவரை பூஜா சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாம, இது போல் செய்ய வேண்டாம். ரசிகர்கள் இவ்வாறு செய்வது தனக்கு வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.