தாடையில் கட்டு இருக்கட்டும்…அணிக்காக களத்தில் வெறித்தன அதிரடி ஆட்டம்.! பிரதமர் மோடிக்கு அனில் கும்ளே நன்றி…!!
- காயத்தோடு களத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கும்ளே
- பிரதமர் மோடிக்கு கும்ளே நன்றி தெரிவித்தார்
தாடையில் ஏற்பட்ட காய காட்டோடு தான் பந்துவீசிய சம்பவத்தை குறிப்பிட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்தார்.
டெல்லியில் அன்மையில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியனார்.அப்போது அவர் மாணவர்களிடம் பேசும் போது 2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தாடையில் காயம் ஏற்பட்டதை பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடிய கும்ப்ளேவை மேற்கோள்காட்டினார்.மேலும் இந்நிகழ்விலிருந்து நேர்மறையான சிந்தனை மற்றும் ஊக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில் மாணவர்களிடம் தன் ஆட்டத்தை குறிப்பிட்டு பேசியமைக்காக பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கும்ளே நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத என் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.