ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம்… அறிவித்தார் அக்கட்சி தலைவர்..
- திமுக சார்பில் தமிழகத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்.
- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக எதிர்கட்சி தலைவர் எடுக்கும் புதிய அஸ்த்திரம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் இதுகுறித்த மத்திய அரசின் அறிவிப்பையும் திரும்ப பெற வேண்டும் என்றும் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வு கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் தேவையில்லை என ஜனவரி 16ல் அறிவித்துள்ளது.
இது குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பையும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் திரும்ப பெற வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 28ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.