பள்ளிக்கு செல்லும் வழியில் ஷேர் ஆட்டோ பழுதாகியதன் காரணமாக சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!செய்வதறியாது திகைத்த பெற்றோர்!

Default Image
  • பள்ளிக்கு செல்லும் வழியில் சிறுமி செல்லும் ஷேர் ஆட்டோ பழுதாகி நின்றுள்ளது.பின்னர் சிறுமிக்கு நடந்த கொடுமை.
  • அதிரடியாக குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்தவர் செஞ்சி குமார் ஆவார்.இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி ஆவார்.

இவர் அங்குள்ள பள்ளியில் 11 -ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.சிறுமி தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்நிலையில் மாணவி சென்ற ஷேர் ஆட்டோ பழுதாகியுள்ளது.

அப்போது அங்கு வந்த செஞ்சி குமார் மாணவியை பள்ளியில் விடுவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார்.பின்னர் கத்தியை காட்டி மிரட்டிய செஞ்சி குமார் மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.பின்பு வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் செஞ்சி குமாரை கைது செய்த காவல்துறையினர் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினறன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்