இந்தியாவில் குடியுரிமை சட்டம் … தேவையே இல்லாதது.. அண்டை நாட்டு பிரதமர் அதிரடி பேச்சு…

Default Image
  • இந்தியாவின் குடியுரிமை சட்டம் தேவையில்லாதது என அண்டை நாட்டு பிரதமர் கருத்து.
  • எனினும் இது இந்தியாவின் உள் விவகாரம் எனவும் கருத்து.

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட  குடியுரிமைச் சட்டமானது நம் அண்டை நாடுகளான  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் வெளியேறும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் முஸ்லிம்களைத் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி மற்றும் கிறிஸ்தவர்கள் என 6 மதங்களைச் சார்ந்தவர்களுக்குக் மட்டும் குடியுரிமை வழங்கும்படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் உட்பட நாட்டில் பலரும் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில்தான், சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்க தேச பிரதமர் சேக் ஹசீனா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இந்திய அரசு இந்தச் சட்டத்தை ஏன் இயற்றியது என எனக்கு தெரியவில்லை.

Image result for shaikh hasina

இந்தச் சட்டம் உண்மையில் தேவையில்லாதது” என்றார். இந்தியாவிலிருந்து வங்கதேச அகதிகள் வெளியேறுவது அதிகரித்துள்ளதே என்ற கேள்விக்குப் பதிலளித்த வங்க தேச பிரதமர் சேக் ஹசீனா, “இல்லை. இந்தியாவிலிருந்து யாரும் வங்கதேசத்துக்குத் தப்பி வரவில்லை. ஆனால், இந்தியாவில் இருக்கும் அகதிகள் அங்கு அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது மட்டும் உறுதி. இருப்பினும் அந்தச் சட்டங்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்” என்றார்.மேலும் கூறிய அவர், வங்கதேசம் எப்போதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC), இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தையும்  இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகவே கருதுகிறது.மேலும்  நான் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவின்  டெல்லி வந்தபோதும், பிரதமர் மோடி அதைத்தான் என்னிடம் உறுதியாகச் சொன்னார். அதனால் இந்தியா – வங்கதேச உறவு மிகவும் வலுவாக இருக்கிறது. இரு நாடுகளும் இனைந்து பல்வேறு துறைகளில் சிறப்புடன் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்