வேலூர் கோட்டையில் பாலியல் துஷ்பிரயோகம்….காதலன் முன்னிலையில் காதலிக்கு நடந்த கொடுமை..!அரேங்கேறிய கொடூரம்

- வேலூர் கோட்டைப் பூங்காவில் காதலன் முன்னிலையில் காதலிக்கு பாலியல் வன்கொடுமை அரேங்கேறியுள்ள கொடூர நிகழ்வு
- பாலியல் வன்முறை தொடர்பாக 3 பேர் கைது
வேலூரில் உள்ள பிரபல துணிக்கடையில் பணியாற்றுகின்ற இளைஞரும், இளம்பெண்ணும் இருவரும் காதலித்து வருகின்றனர். நேற்றிரவு இருவரும் கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டி இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 நபர் அவர்களை கத்தியை காட்டி மிரட்டியது மட்டுமல்லாமல் அந்த இளம்பெண் அணிந்திருந்த கம்மலையும் பறித்து உள்ளனர். மேலும் பெண்ணுடன் இருந்த இளைஞரை சரமாரியாக தாக்கி விட்டு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர்.
நிதானத்திற்கு வந்த இளைஞர் அளித்த புகாரின் பேரில் மணிகண்டன், சக்தி, அஜித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025