எஜமானை காப்பாற்ற 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் .!
- கோவை மாவட்டம் ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம்.
- ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் செல்லும்போது திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது.
கோவை மாவட்டம் ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயியான இவர் வீட்டின் அருகே ராமலிக்கத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.தோட்டங்களை பாதுகாக்க 3 நாய்களை ராமலிங்கம் வளர்த்து வந்து உள்ளார்.
நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் பாதுகாக்க வளர்த்து வந்த 3 நாய்களும் சென்றது.
அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது வழியில் திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது. இதனால் ராமலிங்கம் அவரது நண்பர் இருவரும் பின் நோக்கி சென்றனர்.
இந்நிலையில் அவர்களுடன் வந்த மூன்று நாய்களும் பாம்பை நோக்கி சீரிப்பாய்ந்து பாம்பு கடித்து குதறியது. இந்த காட்சியை ராமலிங்கம் நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியும் வருகிறது.