பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி!
- பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த பிரதமர் மோடி மாணவர்கள் முன் கலந்துரையாடுகிறார்.
- டெல்லியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி மற்ற ஊர்களில் பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்படுகிறது.
இந்தாண்டு பொதுத்தேர்வுகள் எழுத உள்ள பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களை அச்சமின்றி தேர்வெழுத ஆயத்தப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுகிறது. அங்கு நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 66 பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும்போது, ‘ பொதுத்தேர்வுக்கு உங்களை தயார்படுத்த உங்கள் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர். தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளுங்கள்.’ என மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வண்ணம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
நாட்டில் மற்ற பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரத்யேக திரை அமைக்கப்பட்டு வீடியோ மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடல் திரையிடப்படுகிறது.