நிர்பயா குற்றவாளிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு காப்பாற்ற நினைக்கிறது! – பாஜக கடும் தாக்கு!

- நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்து தீர்ப்பளித்துள்ளது.
- டெல்லி மாநில அரசு குற்றவாளிகளை காப்பாற்ற நினைப்பதாக டெல்லி பாஜக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனையை தெரிவிக்கவில்லை. திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு தண்டனையை கூற வேண்டும். ஆனால் டெல்லி மாநில ஆளும் ஆம் ஆத்மி அரசு இதனை செய்யவில்லை. நீதிமன்ற விதிமுறைகளை மீறியுள்ளது என டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், டெல்லி காவல்துறை மட்டுமே மத்திய அரசு வசம் உள்ளது. ஆனால், டெல்லி திகார் சிறை நிர்வாகம் டெல்லி மாநில அரசு வசமே உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி அரசு, நீதிமன்ற விதிமுறையை மீறியுள்ளது. எனவும், நிர்பயா குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்கிறது எனவும் தனது கண்டனத்தை அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மனோஜ் திவாரி பேசினார்.