முன்னனி ஹீரோக்களுக்காக ரசிகர்களை கடிந்து கொண்ட சித்தார்த்!

- தெலுங்கு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் 2 முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகின.
- அதற்கு எதிர்மறையாக டிவிட்டரில் இரு ஹீரோக்களின் ரசிகர்களும் டிவிட்டரில் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் தை பொங்கல் பண்டிகை விடுமுறை போல, ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு முன்னனி நடிகர்களான மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த படங்கள் வெளியாகின.
மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கவாறு, அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரமலூ திரைப்படங்கள் வெளியாகின. இதில் இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் எதிர் எதிர் நடிகர்களை வெகுவாக விமர்சித்து டிவிட்டரில் ஹேஸ் டேக் மூலம் சண்டையிட்டு வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மாதிரியான சண்டைகளில் இருந்து தெலுங்கு சினிமாவை காப்பாற்றுங்கள் என நடிகர் சித்தார்த் தனது கருத்தை வெளிப்படையாக பதிவிட்டுள்ளார்.
#FakeKaBaapAlluArjun and #FakeQweenMaheshbabu are trending in #Telugu twitter. Lakhs of tweets. God save our cinema. What’s wrong with these people? Shameful.
— Siddharth (@Actor_Siddharth) January 18, 2020