பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி! கதிர்வீச்சு பிரச்சனையா உரிமையாளர் அதிர்ச்சி!
- ஜெர்மன் ஷெப்பர்ட் இன பெண் நாய் அண்மையில் 8 குட்டிகளை ஈன்றது.
- அதில், ஒரு நாய்க்குட்டி பச்சை நிறத்தில் பிறந்துள்ளது. அந்த குட்டிக்கு ஹல்க் என உரிமையாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஹால்ட் கவுண்டி எனும் ஊரை சேர்ந்தவர் சனா ஸ்டேமி. இவர் ஜெர்மன் ஷெப்பர்ட் இன பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.
அந்த நாய்க்கு ஜிப்ஸி எனும் பெயர் வைத்துள்ளனர். இந்த நாய் அண்மையில் கருவுற்று 8 நாய்க்குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு ஆண் நாய்க்குட்டி பச்சை நிறத்தில் பிறந்து உரிமையாளருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் சினிமா கதாபாத்திரம் ஹல்க் போலவே இருப்பதால் ஹல்க் என்றே பெயரையே அந்த நாய்க்குட்டிக்கு உரிமையாளர் வைத்துவிட்டார்.
இந்த நாய்க்குட்டி பச்சை நிறத்தில் பிறந்ததற்கு எந்தவித கதிர்வீச்சு பிரச்சனையும் இல்லை. இந்த நாய் குட்டி தன் தாயின் கருவில் இருக்கையில் தாய் கருப்பையில் உள்ள திரவம் நாய்க்குட்டியினை கறைபடுத்தியுள்ளது என விலங்கின ஆர்வலர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.