குடியரசு தினத்தன்று குண்டு வைக்க சதி.. வில்சன் கொலை குற்றவாளிகள் திட்டம் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..
- ஓரே நேரத்தில் ஆறு இடங்களில் குண்டு வெடிக்க வைக்க சதி.
- கைதான தீவிரவாதிகள் விசாரணையில் தகவல்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி புதன் கிழமை இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
பின் இருவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு காரணமான மற்றும் ஒரு அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஜெபிபுல்லா மன்சூர் , அஜ்மத்துல்லா உள்ளிட்டோர் அளித்த தகவலின் பேரில் மெஹபூப் பாஷா என்ற தீவிரவாதி அதிரடியாக பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டான். இவன் காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவன் குறித்த விசாரணையில், தீவிரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தவுபிக் மீதான விசாரணையில், எங்களுடைய தலைவர் மெகபூப் பாஷா (30), இவர, தமிழகத்தில் காஜாமொகீதின் என்பவர் தலைமையில் அல்-ஹண்ட் என்ற அமைப்பை உருவாக்கி இந்த குடியரசு தினத்தன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்க வைக்க திட்டம் தீட்டியிருந்தோம் என்றும்,
இதற்காக 17 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள், எங்கள் தலைவர்கள் மெகபூப் பாஷா, காஜாமொய்தீன் ஆகிய இருவரும் நேபாளம் தலைநகரம் காத்மண்ட்டில் வெடிகுண்டு எப்படி வெடிக்க வைக்க வேண்டும், அதை எப்படி பயன்படுத்தி வெடிக்க வைக்க வேண்டும் என்று பயிற்சி பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து வரும் போது வெடிகுண்டு, துப்பாக்கி போன்றவற்றை கொண்டு வந்ததாகவும் கியூ பிரிவு காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தாக கூறப்படுகிறது.