புரி ஜெகநாதர் கோவிலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர் பி.டெக். பட்டதாரி…காவல்துறையினரை தூக்கி வாரி போட்ட திடுக்கிடும் சம்பவம்..

Default Image
  • பி டெக் பட்டதார் கோவிலில் பிச்சைகாரராக இருந்த உண்மை சம்பவம்.
  • காவல்துறையினரின் விசாரணையில்  திடுக்கிடும் தகவல்கள்.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்கிறது. இங்குள்ள பிரபல  புரி  ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் தான் இந்த  வியக்க வைக்கும் நிகழ்வு அரங்கறியுள்ளது. புரி ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக தினமும்  பிச்சை எடுக்கும் இடத்தில், ஒரு ரிக்ஷாக்காரர்  தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இந்த இடத்தில் தினமும் பிச்சை எடுத்து வருவது குறித்த வாய் வார்த்தையில் தொடங்கி, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த  வாய்த்தகராறு, சிறிது நேரத்தில் அடிதடியாக மாறியது. இதில் அந்த பிச்சைக்காரர் தாக்கியதில், ரிக்ஷாக்காரருக்கு பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இந்த சம்வம் குறித்த  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது  இருவரிடமும் புகார் மனு தருமாறு காவல்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

 

Image result for கிரிஜா சங்கர் மிஸ்ரா பிச்சைக்காரன்

அப்போது அந்த பிச்சைக்காரர் கிரிஜா சங்கர் மிஸ்ரா, சட சட என  அருமையாக ஆங்கிலத்தில் சரளமாக தனது புகார் மனுவை எழுதினார். அதைப் பார்த்த காவல்துறையினர்  ஆச்சரியமடைந்தனர். இதையடுத்து, அவரிடம் தோண்டித் துருவி விசாரணை நடத்தினர். அப்போதுதான், அந்த பிச்சைகாரரின் உண்மையான நிலை மற்றும் அவரது  பின்னணி தெரியவந்துள்ளது. இந்த பிச்சைகாரர்  ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளரின் மகன் தான் இந்த பிச்சைகாரர்  என்பதும் இவர் ஒரு  பி.டெக். பட்டதாரி என்பதும் தெரியவந்தது. இவர் தனது படிப்பை முடித்த சில ஆண்டுகளிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வீட்டிலிருந்து வெளியேறி புரி ஜெகநாதர் கோவிலுக்கு  வந்து பிச்சை எடுத்து வந்தார் என்பதையும் காவல்துறையினர் தெரிந்துகொண்டனர்.  இதையடுத்து, அவரது குடும்பத்தினரை கண்டறிந்து  இவரை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்