பயணியர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதை ஒப்புகொண்டது ஈரான்.. டிரம்பை ஒரு கோமாளி என்றும் காட்டமாக விமர்சனம்..

  • முற்றுகிறது ஈரான்-அமெரிக்கா யுத்தம்.
  • உக்ரைன் பயணியர் விமானம் தவறுதலாக சுடப்பட்டதாகவும் விளக்கம்.

எண்ணெய் வளம் கொழிக்கும்  ஈரானின், குத்ஸ் படைப்பிரிவின்  தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் தலைநகர் பாக்தாத் வந்தபோது,அங்கு  அமெரிக்க படையினரால் ஏவுகனை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த ஈரான், அமெரிக்காவை பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தில், ஈராக்கில் உள்ள, அமெரிக்க விமான தளங்கள் மீது, ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த  விவகாரம் மிகவும் மோசமான நிலையை அடந்துவரும் நிலையில், ஈரானில் நேற்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின் போது, அந்நாட்டு தலைமை நிர்வாகி அயதுல்லா அலி கொமேனி, ஈரான் நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையில்,  ஐ.எஸ்., பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில், நாம் நமது திறமை வாய்ந்த ஈரான் ராணுவ தளபதியை, கோழைத்தனமாக அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

Image result for ayatollah ali khamenei

இதற்கு ஈரான் படையினர் பதிலடி தரும்போது, துரதிஷ்டவசமாக எதிபாராமல் , உக்ரைன் பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த வருத்தத்துக்குரிய சம்பவம், இது, நமது எதிரிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.தவறுதலாக நடந்த இந்த சம்பவம், நமது தளபதியின் தியாகத்தை மறைத்துவிட நாம் அவர்களுக்கு  வாய்ப்பளிக்க கூடாது.அமெரிக்கா மீது நமது படைகள் நடத்திய தாக்குதல், அவர்களுக்குள் பேரிடியாக இறங்கியுள்ளது. எங்களை அவர்கள்  காலடியில் விழ செய்ய முடியாது. பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார். ஆனால்,  ஒருநாளும் அமெரிக்காவுடன் பேச்சு நடத்த முடியாது.

Image result for trump

அமெரிக்கா ஈரான் மீது அக்கறை இருப்பது போல காட்டுவதையும், ஈரானியர்களுக்கு ஆதரவு அளிப்பதைப் போலவும் நடந்து கொள்வதை போல, டிரம்ப் காட்டிக் கொள்கிறார். அவர், நிச்சயமாக ஈரானியர்களை நம்ப வைத்து துரோகம் இழைத்துவிடுவார். டிரம்ப் ஒரு கோமாளி. அவரை நம்பாதீர்கள். இவ்வாறு, அவர் பேசினார். அமெரிக்க அதிபரை கோமாளி என்ற விமர்சனம் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதைப்போல் அமைந்துள்ளது.

author avatar
Kaliraj