காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு.. மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி அதிரடியாக கைது..
- காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் புதிய திருப்பம்.
- கொலைக்கு மூல காரணமாக இருந்த முக்கிய தீவிரவாதி அதிரடியாக கைது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் தீவிரவாதிகள் எஸ்ஐ வில்சனை கொலைசெய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து கொலை செய்ததாக இருவரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலைக்கு காரணமான அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஜெபிபுல்லா மன்சூர் , அஜ்மத்துல்லா உள்ளிட்டோர் அளித்த தகவலின் பேரில் மெஹபூப் பாஷா என்ற தீவிரவாதி பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டான். இவன் காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என கூறப்படுகிறது. இவனிடம் நடக்கும் விசாரனையின் இறுதியில் தான் இந்த கொலைக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.